மைக்கேல் ஜோர்டனை எதற்காகத் தேர்வு செய்தது சிஎஸ்கே?

இந்த வருட ஐபிஎல்-லில் 4 ஆட்டங்களில் விளையாடி 2 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார் ஜோர்டன்.
மைக்கேல் ஜோர்டனை எதற்காகத் தேர்வு செய்தது சிஎஸ்கே?

ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து வீரர் மைக்கேல் ஜோர்டனை சிஎஸ்கே அணி தேர்வு செய்தபோது பலருக்கும் அது ஆச்சர்யமாக இருந்தது.

ஜோர்டனைத் தேர்வு செய்ய சிஎஸ்கேவும் ஆர்சிபியும் போட்டியிட்டதில் ரூ. 3.60 கோடிக்குத் தேர்வு செய்தது சிஎஸ்கே. (இப்போது இதை நினைத்து, நல்லவேளை தப்பித்தோம் என்று நினைப்பார்களா ஆர்சிபி ரசிகர்கள்!)

சிஎஸ்கே ஜோர்டனைத் தேர்வு செய்ததற்குக் காரணம், அவர் ஓரளவு நல்ல ஆல்ரவுண்டர் எனக் கூறலாம். நல்ல ஃபீல்டரும் கூட. கேட்சுகளை அவர் நழுவவிட்டுப் பார்த்ததில்லை என கிரிக்கெட் வர்ணனையில் கூறுவார்கள்.

எல்லாம் சரி, எதற்காக அவர் தேர்வு செய்யப்பட்டாரோ அதில் பலவீனமாக இருப்பதுதான் சிஎஸ்கே அணியை மிகவும் பாதித்துள்ளது.

ஐபிஎல் போட்டியில் கடைசி ஓவர்களில் (16-20) மிக மோசமாகப் பந்துவீசியவர்களில் ஜோர்டனுக்கே முதலிடம். 200 பந்துகளில் வீசி 394 ரன்கள் கொடுத்துள்ளார். 22 சிக்ஸர்கள், 31 பவுண்டரிகள், 11 விக்கெட்டுகள். எகானமி - 11.82. இவரை விடவும் வேறு யாரும் இத்தனை ரன்கள் கொடுத்ததில்லை. இவரை எப்படித் தேர்வு செய்தது சிஎஸ்கே? மோசமாகப் பந்துவீசுகிறார் என்று தெரிந்தும் தொடர்ந்து வாய்ப்புகள் தருவது ஏன்?

ஜோர்டனை ஏலத்தில் தேர்வு செய்தது எப்படி? அணியில் ஹேசில்வுட் இல்லையென்றால் இன்னொரு நல்ல வெளிநாட்டுப் பந்துவீச்சாளரைத் தேர்வு செய்திருக்கலாம். அப்படி வருகிற பந்துவீச்சாளரும் ஆல்ரவுண்டராக இருக்கவேண்டும் என்று தப்புக் கணக்குப் போட்டு ஜோர்டனையும் ஷிவம் டுபேவையும் தேர்வு செய்தது சிஎஸ்கே. அதுவே இந்த வருடம் பல தோல்விகள் அடைய முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது.

இந்த வருட ஐபிஎல்-லில் 4 ஆட்டங்களில் விளையாடி 2 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார் ஜோர்டன். எகானமி - 10.52. இதற்கு மேலும் சிஎஸ்கே ஜோர்டனுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் தரப்போகிறதா? பிரிடோரியஸின் திறமைக்கு இனிமேலாவது அங்கீகாரம் கிடைக்குமா? 

ஐபிஎல் 2020 முதல் 16-20 ஓவர்களில் மோசமான எகானமி உள்ள பந்துவீச்சாளர்கள் (குறைந்தது 100 பந்துகள்)

பேட் கம்மின்ஸ்: 12.28
கிறிஸ் ஜோர்டன்: 11.91
பிரசித் கிருஷ்ணா: 11.40
ரஸ்ஸல்: 11.38

ஐபிஎல் போட்டியில் குறைந்தது 120 பந்துகள் வீசி மோசமான எகானமி உள்ள பந்துவீச்சாளர்கள்

கிறிஸ் ஜோர்டன்: 11.82
பாண்டியா: 11.61
ஷிவம் மவி: 11.55
பசில் தம்பி: 11.53

ஐபிஎல் போட்டியில் குறைந்தது 200 பந்துகள் வீசி மோசமான எகானமி உள்ள பந்துவீச்சாளர்கள்

கிறிஸ் ஜோர்டன்: 11.82
உனாட்கட்: 11.31
ரஸ்ஸல்: 11.31
பொலார்ட்: 11.27

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com