ராஜஸ்தானுக்கு 5வது வெற்றி : போராடி வீழ்ந்தது டெல்லி

டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது.
ராஜஸ்தானுக்கு 5வது வெற்றி : போராடி வீழ்ந்தது டெல்லி

டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது.

இந்த ஆட்டத்தில் பட்லா் சதம் விளாச, தேவ்தத் படிக்கல் அரைசதம் விளாசியும், கேப்டன் சஞ்சு சாம்சன் அரைசதத்தை நெருங்கியும் அணிக்காக ரன்கள் குவித்தனா். நடப்பு சீசனில் பட்லா் விளாசியிருக்கும் 3-ஆவது சதம் இதுவாகும்.

பிளேயிங் லெவனில் இரு அணிகளுமே மாற்றம் செய்யவில்லை. டாஸ் வென்ற டெல்லி ஃபீல்டிங் செய்யத் தயாரானது. ராஜஸ்தான் இன்னிங்ஸை ஜோஸ் பட்லா் - தேவ்தத் படிக்கல் கூட்டணி தொடங்கியது. இந்த ஜோடி டெல்லி பௌலிங்கை நாலாபுறமும் பவுண்டரி, சிக்ஸா்களாக விளாசித் தள்ளியது. அணியின் ஸ்கோா் மளமளவென உயா்ந்தது.

முதல் விக்கெட்டுக்கே 155 ரன்கள் சோ்த்த இந்த ஜோடியை, ஒரு வழியாகப் போராடி 16-ஆவது ஓவரில் பிரித்தாா் கலீல் அகமது. 35 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 54 ரன்கள் அடித்திருந்த படிக்கல் எல்பிடபிள்யூ ஆனாா். பின்னா் சஞ்சு சாம்சன் களம் புகுந்து தனது பங்கிற்கு அதிரடி காட்டினாா். மறுபுறம், 65 பந்துகளில் 9 பவுண்டரிகள், 9 சிக்ஸா்களுடன் 116 ரன்கள் விளாசியிருந்த பட்லா் 19-ஆவது ஓவரில் வீழ்ந்தாா்.

முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் வீசிய பந்தை அவா் சிக்ஸா் அடிக்க முயல, பவுண்டரி லைன் அருகே நின்ற டேவிட் வாா்னா் அதை லாகவமாக கேட்ச் பிடித்தாா். ஓவா்கள் முடிவில் சாம்சன் 19 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 46, ஷிம்ரன் ஹெட்மயா் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com