ஐபிஎல்: தொடர்ச்சியாக மூன்று அரை சதங்கள் எடுத்த பாண்டியா!

கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியா, அரை சதமெடுத்து அசத்தியுள்ளார்.
ஐபிஎல்: தொடர்ச்சியாக மூன்று அரை சதங்கள் எடுத்த பாண்டியா!

கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியா, அரை சதமெடுத்து அசத்தியுள்ளார்.

கடந்த வருடம் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா, பிறகு நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்டார். தென்னாப்பிரிக்காவுக்கும் செல்லவில்லை. சமீபத்தில் இந்திய அணி விளையாடிய எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. ஐபிஎல் 2021 போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய பாண்டியா, காயம் காரணமாக ஒரு ஓவர் கூட வீசவில்லை. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராகப் பந்து வீசாததால் விமர்சனங்களுக்கு ஆளானார். பிறகு நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் பந்து வீசினாலும் ஒரு விக்கெட்டும் அவர் எடுக்கவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்தபோது தோள்பட்டையில் பாண்டியாவுக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்துக் காயத்துக்குச் சிகிச்சை எடுத்து வந்தார்.

2015-ல் ஐபிஎல் போட்டியில் அறிமுகமானார் பாண்டியா. கடந்த வருடம் வரை மும்பை அணிக்கு மட்டுமே விளையாடியுள்ளார். ஏழு வருடங்கள் விளையாடியதில் மும்பை அணி நான்கு முறை சாம்பியன் ஆகியுள்ளது. ஐபிஎல் 2022 போட்டியில் குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் சிகிச்சை எடுத்துக்கொண்ட ஹார்திக் பாண்டியா, ஐபிஎல் போட்டியில் முழு உடற்தகுதியுடன் விளையாடி வருகிறார். இப்போது பந்துவீசவும் செய்வதால் அவருக்குப் பாராட்டுகள் கிடைத்துள்ளன.

ஐபிஎல் 2022 போட்டியில் பேட்டிங்கிலும் பாண்டியா அசத்தி வருகிறார். வழக்கமாகக் கீழ்நடுவரிசை வீரராகக் கடைசி ஓவர்களில் களமிறங்கும் பாண்டியா, குஜராத் அணியில் நடுவரிசை வீரராகக் களமிறங்கி பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 3-ம் நிலை வீரராகக் களமிறங்கி 49 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்தார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் பாண்டியாவின் தொடர்ச்சியான 3-வது அரை சதம் இது. 

ஐபிஎல் 2022: பாண்டியா எடுத்த ரன்கள்

33(28)
31(27)
27(18)
50*(42)
87*(52)
67(49)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com