முன்னாள் கிரிக்கெட் வீரர்களான இர்பான் பதான், அமித் மிஸ்ரா ஆகியோர் ட்விட்டரில் இந்தியா பற்றி பதிவுகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
இந்தியாவின் வல்லமை குறித்து பதிவிட்ட இர்பான் பதான், "என் நாடு. அழகான நாடு. உலகின் மிகப் பெரிய நாடாகும் வல்லமை கொண்டது. ஆனால், " என வாக்கியத்தை நிறைவு செய்யாமல் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக வாக்கியத்தை நிறைவு செய்த அமித் மிஸ்ரா, "என் நாடு. அழகான நாடு. உலகின் மிகப் பெரிய நாடாகும் வல்லமை கொண்டது. ஆனால், அரசியலமைப்புதான் பின்பற்ற வேண்டிய முதல் புத்தகம் என்பதை ஒரு சிலர் உணர்ந்தால் மட்டுமே அது சாத்தியம்" என பதிவிட்டார்.
எது குறித்து ட்வீட் செய்துள்ளார்கள் என்பதை இருவரும் விளக்கவில்லை என்றாலும், தில்லி ஜஹாங்கீர்புரியில் நடைபெற்ற வன்முறை பற்றிய பதிவுதான் இது என சமூகவலைதள பயனாளர்கள் இதை ட்ரெண்ட் செய்ய தொடங்கினர்.
துணிவு இருந்தால் வாக்கியத்தை நிறைவு செய்யும்படி பலர் பதானை கடுமையாக சாடினர். கிரிக்கெட் மூலம் பெற்ற நற்பெயரை இழந்தவிட வேண்டாம் என்றும் ஒரு சிலர் கருத்து பதிவிட்டிருந்தனர். இதையடுத்து, பதானின் வாக்கியத்தை மிஸ்ரா நிறைவு செய்ய இது ட்விட்டரில் விவாத பொருளாக மாறியது.
முன்னதாக, சனிக்கிழமையன்று ஹனுமான் ஜெயந்தி விழாவின்போது ஜஹாங்கீர்புரியில் வன்முறை வெடித்தது. பின்னர், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகக் கூறி இஸ்லாமியர்களின் வீடுகளையும் கடைகளையும் மாநகராட்சி இடித்து தள்ளியது.
இதே போன்று உத்தரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குறிப்பிட்ட சமூகத்தினரின் வீடுகள் கடைகள் ஆகியவை இடிக்கப்பட்டதா குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மேற்காசிய போர்: இந்தியா நிலைப்பாடு என்ன? மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!

கோவை பேருந்து நிலையத்தில் நடனமாடிய யூடியூபருக்கு சம்மன்!

ஒபெக் நிதியின் கீழ் வேலை வாய்ப்பளிக்கும் பட்டப்படிப்பு!

ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு
வீடியோக்கள்

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

