தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

ஒபெக் நிதியின் கீழ் வேலை வாய்ப்பளிக்கும் பட்டப்படிப்பு!

ஒபெக் நிதியின் கீழ் இளைஞர்களுக்கு பணி வாய்ப்புகளை அளிக்கும் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :9 மார்ச் 2026, 11:58 am IST

சர்வதேச மேம்பாட்டுக்கான ஓபெக் நிதியின் இளம் தொழில்துறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இளைஞர்கள் இரண்டாண்டு படிப்புகளை மேற்கொள்ள, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

சர்வதேச மேம்பாட்டுக்கான ஓபெக் நிதியின் உறுப்பு நாடுகளிலிருந்து, இளம் தலைமுறையினரை தேர்வு செய்து தொழில் மேம்பாட்டுப் படிப்புகளை அளிக்கும் வகையில் ஒய்பிடிபி என்ற படிப்பானது 2 - 3 ஆண்டுகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க 2026, ஏப்ரல் 11ஆம் தேதி கடைசி நாளாகும்.

விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரி.. https://career2.successfactors.eu/careers?company=opecfundfo

விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.. ஓபெக் நிதியளிக்கும் நாடுகளைச் சேர்ந்தவர்கள். 30 வயதுக்குட்பட்டவர்கள், குறைந்தபட்சம் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கல்வியில் சிறந்த மாணவராக விளங்கியவர், ஆங்கிலத்தில் புலமை கொண்டிருக்க வேண்டும். 3 ஆண்டுகள் பணியனுபவம் கொண்டவராகவும் ஓபெக் நிதி குறித்து நன்கு அறிந்தவராக இருப்பது முக்கியம்.

இதில் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு ஓபெக் நிதியமைப்பில் பணி வழங்கப்படுகிறது. விண்ணப்பத்துடன் ஓபெக் நிதி குறித்த கட்டுரையையும் இணைக்க வேண்டும்.

Summary

You can apply for a degree program that provides job opportunities for young people under OPEC funding.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.