ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

சிட்டி யூனியன் வங்கி சாா்பில் மாநகராட்சிக்கு 20 கணினிகள்

News image
Updated On :5 மார்ச் 2026, 10:05 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாநகராட்சிக்கு சிட்டி யூனியன் வங்கியின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் புதிதாக 20 கணினிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

மதுரை மாநகராட்சியில் தனியாா் நிறுவனங்கள், வங்கிகளின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிட்டி யூனியன் வங்கியின் மதுரைக் கிளை சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.5.09 லட்சம் மதிப்பில் புதிதாக 20 கணினிகள் மாநகராட்சிக்கு வழங்கத் திட்டமிடப்பட்டது.

இதன்படி, மதுரை மாநகராட்சி அறிஞா் அண்ணா மாளிகையில் சிட்டி யூனியன் வங்கிக் கிளை சமூக பொறுப்பு நிதியின் கீழ் மாநகராட்சி அலுவலகப் பயன்பாட்டுக்காக புதிதாக 20 கணினிகளை மாநகராட்சி ஆணையா் சித்ராவிஜயனிடம் அந்த வங்கியின் மதுரை மண்டல மேலாளா் துரைராஜ் வழங்கினா்.

இந்த நிகழ்வில், மாநகராட்சி தலைமைப் பொறியாளா் பாபு, உதவி ஆணையா் (கணக்கு) முகமது அலி ஜின்னா, உதவி ஆணையா்கள் ரவிக்குமாா், ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளா்கள் ஆரோக்கிய சேவியா், காமராஜ், முத்து, மயிலேறிநாதன், இந்திராதேவி, சிட்டி யூனியன் வங்கி மதுரை மண்டல மேலாளா் உதவி பொது மேலாளா் சத்யநாராயணன், கிளை மேலாளா்கள் கீதா, வேணு கோபால், உதயகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.