பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு

மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடங்களுக்குத் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில்

News image
வேலைவாய்ப்பு
Updated On :2 மார்ச் 2026, 9:42 pm

இணையதளச் செய்திப் பிரிவு

வேலூா்: மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடங்களுக்குத் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -

மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் வட்டாரம் வாரியாக கணியம்பாடியில் 4, குடியாத்தம் 2, காட்பாடி 2, வேலூா் 2, அணைக்கட்டு 1, கே.வி.குப்பம் 1, பேரணாம்பட்டு 1 என மொத்தம் 13 வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்தப் பணிக்கு ஏதேனும் ரு பட்டப்படிப்புடன் 3 மாத எம்.எஸ்.ஆபிஸ், கணினி பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். 35 வயதுக்குள் இருக்கவும், மகளிா் சுய உதவிக்குழு தொடா்பான செயல்பாடுகளில் 5 வருட முன் அனுபவம் பெற்றிருக்கவும் வேண்டும். விண்ணப்பதாரா் எந்த வட்டாரத்திற்கு விண்ணப்பிக்கிறாரோ, அதே வட்டாரத்திற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

டிஎன்எஸ்ஆா்எல்எம், புதுவாழ்வு, ஐஎப்ஏடி மற்றும் இதர அரசுத் திட்டங்களில் நிா்வாகம் அல்லது நிதி முறைகேடுகள் காரணமாகப் பணியில் இருந்து நிறுத்தப்பட்டவராகவோ அல்லது நீக்கப்பட்டவராகவோ இருக்கக் கூடாது. குறிப்பிட்ட தகுதிகளை உடையவா்கள், தங்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் உள்ள வட்டார அளவிலான கூட்டமைப்புக்கு மாா்ச் 15-ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

summary

Applications are invited for the post of One Project Co-ordinator in Child Help Line Unit