புதிய அபராதத்தால் சிக்கலை எதிர்கொண்டுள்ள கே.எல். ராகுல்

ஓவர்கள் வீச நீண்ட நேரம் எடுத்துக்கொண்டதற்காக லக்னெள கேப்டன் கே.எல். ராகுலுக்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புதிய அபராதத்தால் சிக்கலை எதிர்கொண்டுள்ள கே.எல். ராகுல்

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஓவர்கள் வீச நீண்ட நேரம் எடுத்துக்கொண்டதற்காக லக்னெள கேப்டன் கே.எல். ராகுலுக்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஆட்டத்தை 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது லக்னெள அணி. முதலில் பேட்டிங் செய்த லக்னெள அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. பிறகு விளையாடிய மும்பை அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 62 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த லக்னெள கேப்டன் கே.எல். ராகுல் ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 

இந்த ஆட்டத்தில் மும்பை இன்னிங்ஸின்போது ஓவர்களை முடிக்கக் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது லக்னெள அணி. இதையடுத்து லக்னெள அணி கேப்டன் கே.எல். ராகுலுக்கு ரூ. 24 லட்சமும் நேற்றைய ஆட்டத்தில் விளையாடிய வீரர்களுக்கு ரூ. 6 லட்சமும் (அல்லது 25% ஊதியம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுபோல 2-வது முறையாக ராகுலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு மும்பைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் அவருக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 

இதையடுத்து இன்னொரு ஆட்டத்தில் லக்னெள அணி, ஓவர்களை வீசி முடிக்கக் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டால் ஐபிஎல் விதிமுறைகளின்படி ஓர் ஆட்டத்தில் விளையாட கே.எல். ராகுலுக்குத் தடை விதிக்கப்படும். இதனால் இனி வரும் ஆட்டங்களில் புதிய நெருக்கடியை அவர் எதிர்கொண்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com