பாவெல் கடைசி நேரத்தில் அதிரடி: டெல்லி அபார வெற்றி

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பந்துவீச்சின்போது ஷ்ரேயஸ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் குல்தீப் மற்றும் பந்த்
பந்துவீச்சின்போது ஷ்ரேயஸ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் குல்தீப் மற்றும் பந்த்


கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்-இன் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது.

147 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் டெல்லி தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். உமேஷ் யாதவ் முதல் பந்திலேயே பிரித்வி ஷா விக்கெட்டை வீழ்த்தி மிரட்டல் தொடக்கத்தைத் தந்தார். ஹர்ஷித் ராணா வீசிய 2-வது ஓவரில் மிட்செல் மார்ஷ் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு, டேவிட் வார்னர் மற்றும் லலித் யாதவ் பாட்னர்ஷிப் அமைத்தனர். வார்னர் அதிரடியால் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் குறைவாகவே இருந்தது.

இந்த நிலையில், 10-வது ஓவரை வீசிய உமேஷ் யாதவ் வார்னர் விக்கெட்டை வீழ்த்தினார். வார்னர் 26 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்த ஓவரில் சுனில் நரைன், லலித் யாதவ் விக்கெட்டை வீழ்த்தினார். மீண்டும் பந்துவீசிய உமேஷ் யாதவ், டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் விக்கெட்டை வீழ்த்தினார்.

3 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்ததால் டெல்லி அணி நெருக்கடிக்குள்ளானது. ஆனால், அக்சர் படேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ரோவ்மன் பவெல் அவருக்கு ஒத்துழைப்பு தந்தார். இந்த பாட்னர்ஷிப் கொல்கத்தாவுக்கு மீண்டும் நெருக்கடியளித்தது. 

இந்த நிலையில், அக்சர் படேல் 24 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். ஆனால், பாவெல் சரியான ஓவரைக் குறிவைத்து கடைசி நேரத்தில் அதிரடி காட்டினார். வெங்கடேஷ் ஐயர் மற்றும் டிம் சௌதி ஓவரில் பாவெல் சிக்ஸரை பறக்கவிட்டதால், கடைசி 2 ஓவரில் டெல்லி வெற்றிக்கு 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன.

யாரும் எதிர்பார்த்திராத வகையில் ஷ்ரேயஸ் ஐயர் 19-வது ஓவரை வீசினார். முதல் 4 பந்துகளில் ஷர்துல் தாக்குரால் ரன் எடுக்க முடியவில்லை. இதனால், சற்று விறுவிறுப்பு அதிகரித்தது. 5-வது பந்தில் 1 ரன் எடுக்க, கடைசி பந்தில் பாவெல் சிக்ஸரை பறக்கவிட்டு வெற்றியை உறுதி செய்தார்.

19 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பாவெல் 16 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com