'இது பழைய ராஜஸ்தான் டீமுங்க': புதிய ஐபிஎல் அணிக்கு பீட்டர்சென் புகழாரம்
By DIN | Published On : 30th April 2022 02:41 PM | Last Updated : 30th April 2022 02:41 PM | அ+அ அ- |

பீட்டர்சென் (கோப்புப்படம்)
நடப்பு ஐபிஎல் சீசனில் புதிதாகக் களமிறங்கியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியை 2008-இல் கோப்பை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸுடன் ஒப்பிட்டு கெவின் பீட்டர்சென் பாராட்டியுள்ளார்.
ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி ஒரேயொரு ஆட்டத்தில் மட்டும் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை ஆக்கிரமித்து வருகிறது. இதனை 2008-இல் ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் ஒப்பிட்டு பீட்டர்சென் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பீட்டர்சென் கூறியதாவது:
தற்போதைய நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியை ஐபிஎல்-இல் கட்டுப்படுத்துவது கடினமானது. அவர்களது அணியைப் பார்த்தபோது அவர்கள் புள்ளிகள் பட்டியலில் முதன்மையாக இருப்பார்கள் என நினைக்கவில்லை. ஆனால், அவர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர். இது 2008 ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நினைவுபடுத்துகிறது. அவர்கள் சிறந்த அணி இல்லை. ஆனால், அவர்கள் அனைவருக்கும் தாங்கள் செய்கிறோம் என்பது தெரியும். அவர்களிடம் சிறந்த மனநிலை இருந்தது.
ஆட்டத்தில் நல்ல நிலையோ, மோசமான நிலையோ, சீரான நிலையோ, வெற்றி பெறுவதற்குத் தொடர்ந்து வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர். இந்த மனநிலை இருந்தால், அதை உடைப்பது கடினமானதாகிவிடும்" என்றார் அவர்.