ஐபிஎல் 2022: தோனிக்கு மீண்டும் சவால் அளிப்பார்களா நரைனும் வருண் சக்ரவர்த்தியும்?

இன்றைய ஆட்டத்தில் இந்த இரு பந்துவீச்சாளர்களும் தோனிக்கு எவ்விதமான புதிய சவால்களைத் தருவார்கள்...
ஐபிஎல் 2022: தோனிக்கு மீண்டும் சவால் அளிப்பார்களா நரைனும் வருண் சக்ரவர்த்தியும்?

ஐபிஎல் 2022 போட்டி இன்று முதல் ஆரம்பமாகிறது. முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே, கேகேஆர் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் போட்டி மார்ச் 26-ல் தொடங்கி மே 29 அன்று நிறைவுபெறவுள்ளது. 70 லீக் ஆட்டங்கள் மஹாராஷ்டிர மாநிலத்தின் மும்பை, புணேவில் நடைபெறவுள்ளன. 10 அணிகளும் தலா 14 ஆட்டங்களில் விளையாடவுள்ளன. 10 அணிகளும் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் இருமுறையும் மீதமுள்ள 4 அணிகளுடன் ஒருமுறையும் விளையாடவுள்ளன. குரூப் ஏ-வில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், தில்லி, லக்னெள ஆகிய அணிகளும் குரூப் பி-வில் சென்னை, சன்ரைசர்ஸ், ஆர்சிபி, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. சிஎஸ்கே அணி - மும்பை, சன்ரைசர்ஸ், ஆர்சிபி, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளுடன் இருமுறையும் மீதமுள்ள 4 அணிகளுடன் ஒருமுறையும் லீக் சுற்றில் விளையாடவுள்ளது. (2022 ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைந்துள்ளன.)

இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியில் வீரராக விளையாடும் தோனிக்கு கேகேஆர் அணியைச் சேர்ந்த சுநீல் நரைனும் வருண் சக்ரவர்த்தியும் சவாலை அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐபிஎல் போட்டியில் தோனியை நிதானமாக விளையாட வைக்கும் ஒரே சுழற்பந்து வீச்சாளர் சுநீல் நரைன் மட்டுமே.

ஐபிஎல் போட்டியில் நரைனின் பந்துவீச்சில் 66 பந்துகளை எதிர்கொண்ட தோனி, 35 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 53.03 மட்டுமே. இதுவரை நரைன் பந்துவீச்சில் தோனி ஒரு சிக்ஸரும் அடித்ததில்லை. 1 பவுண்டரி மட்டுமே அடித்துள்ளார். 29 சிங்கிள்கள். 

அதேபோல இதுவரைக்கும் தோனிக்கு எதிராக விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் தோனியை வீழ்த்தியுள்ளார் வருண் சக்ரவர்த்தி. தன்னுடைய ஆதர்ச வீரரின் விக்கெட்டை வீழ்த்துவதில் அவரிடையே பெருமிதம் உண்டு. 

இன்றைய ஆட்டத்தில் இந்த இரு பந்துவீச்சாளர்களும் தோனிக்கு எவ்விதமான புதிய சவால்களைத் தருவார்கள் எனப் பார்க்கவேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com