ஐபிஎல்: கேன் வில்லியம்சனுக்கு அபராதம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ஓவர்கள் வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் சன்ரைசர்ஸ் அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல்: கேன் வில்லியம்சனுக்கு அபராதம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ஓவர்கள் வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் சன்ரைசர்ஸ் அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

புணேவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. அந்த அணியின் முக்கிய பேட்டர்கள் அனைவரும் சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடினார்கள். சஞ்சு சாம்சன் 55, படிக்கல் 41, பட்லர் 35, ஹெட்மையர் 32 ரன்கள் எடுத்தார்கள். நடராஜன், உம்ரான் மாலிக் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். வாஷிங்டன் சுந்தர் 3 ஓவர்கள் வீசி 47 ரன்கள் கொடுத்தார். அவருடைய பந்துவீச்சில் 5 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன.

சன்ரைசர்ஸ் அணி மிக மோசமாக பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மார்க்ரம் ஆட்டமிழக்காமல் 57 ரன்களும் 8-வது பேட்டராகக் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 14 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 40 ரன்களும் எடுத்தார்கள். சஹார் 3 விக்கெட்டுகளும் பிரசித் கிருஷ்ணா, போல்ட் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 61 ரன்கள் வித்தியாசத்தில் ஐபிஎல் 2022 போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது ராஜஸ்தான் அணி. 

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் 20 ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் சன்ரைசர்ஸ் அணி கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவும் ஓவர்கள் வீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட காரணத்துக்காக அபராதத்தை எதிர்கொண்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com