போருக்கு முன் புன்னகை: சென்னை, பெங்களூரு வீரர்கள் புகைப்படங்கள்

பயிற்சியின்போது எடுக்கப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
படம்: ஐபிஎல் | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
படம்: ஐபிஎல் | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு


பயிற்சியின்போது எடுக்கப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் கிரிக்கெட்டின் நாளைய (புதன்கிழமை) லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டம் புனேவில் நடைபெறுகிறது. இரண்டு அணிகளுமே வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், ஆட்டத்தில் அதிகளவிலான விறுவிறுப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு இரண்டு அணி வீரர்களும் இன்று (திங்கள்கிழமை) பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது வீரர்கள் சந்தித்துக் கொண்ட புன்னகைத் தருணங்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ அணி நிர்வாகங்கள் இரண்டுமே புகைப்படங்களை வெளியிட்டுள்ளன.

இந்த சீசனில் இரண்டு அணிகளும் முதன்முறையாக மோதிக்கொண்டபோதும் பயிற்சியில் எடுக்கப்பட்ட வீரர்களின் நெகிழ்ச்சித் தருணங்களின் புகைப்படங்கள் மற்றும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com