டாஸ் வென்று முதலில் பேட்டிங் எடுத்தது ஏன்?: பாண்டியா விளக்கம்

ஐபிஎல் 2022 போட்டியில் டாஸ் வெல்லும் பெரும்பாலான அணிகள் முதலில் பந்துவீசவே முடிவெடுக்கின்றன.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் எடுத்தது ஏன்?: பாண்டியா விளக்கம்

ஐபிஎல் 2022 போட்டியில் டாஸ் வெல்லும் பெரும்பாலான அணிகள் முதலில் பந்துவீசவே முடிவெடுக்கின்றன. பனிப்பொழிவு காரணமாக 2-வதாகப் பந்துவீசும்போது பந்துவீச்சாளர்களுக்குச் சிரமம் ஏற்படுவதால் இந்த முடிவைத்தான் பெரும்பாலான கேப்டன்கள் எடுக்கிறார்கள். 

ஆனால், பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் பாண்டியா, முதலில் பேட்டிங் செய்வதாகக் கூறினார். அவருடைய இந்த முடிவு பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் இரவில் நடக்கும் ஆட்டங்களில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு முதல் கேப்டன் - பாண்டியா தான். அதேபோல ஏப்ரல் 23 அன்று கொல்கத்தாவுக்கு எதிரான பகல் ஆட்டத்தில் டாஸ் வென்ற பாண்டியா, பேட்டிங்கையே முதலில் தேர்வு செய்தார். ஐபிஎல் 2022 போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தவர் பாண்டியா தான். அந்த ஆட்டத்தில் குஜராத் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.  

எனினும் பஞ்சாபுக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து தன்னுடைய முடிவுக்கான காரணம் குறித்து பாண்டியா கூறியதாவது:

எங்களுடைய செளகரியமான நிலையிலிருந்து (2-வதாக பேட்டிங் செய்து வெற்றி பெறுவது) வெளியேறி, கடினமான சூழலில் விளையாடிப் பழக வேண்டும் என்பதால் டாஸ் வென்று பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தேன். இலக்கை விரட்டுவதை நன்றாகச் செய்து வருகிறோம். எங்களுடைய பேட்டர்களை அழுத்தத்துக்கு உட்படுத்தவேண்டும் என விரும்பினோம். இதன்பிறகு முதலில் பேட்டிங் செய்யும்போது என்ன செய்யவேண்டும் என்பது எங்களுக்குத் தெரிய வேண்டும். இதை ஒரு பயிற்சியாகச் செய்து பார்க்க விரும்பினோம். இந்தத் தோல்வியை ஒரு பாடமாக எடுத்துக்கொள்கிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com