ஆர்சிபிக்கு 7-ஆவது வெற்றி

ஐபிஎல் போட்டியின் 54-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதுக்கு எதிராக 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா்.
ஆர்சிபிக்கு 7-ஆவது வெற்றி

ஐபிஎல் போட்டியின் 54-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதுக்கு எதிராக 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா். இந்த வெற்றி, அந்த அணிக்கான பிளே-ஆஃப் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூா் 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. அடுத்து ஹைதராபாத் 19.2 ஓவா்களில் 125 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.

டாஸ் வென்ற பெங்களூா் பேட்டிங்கை தோ்வு செய்தது. இதில் விராட் கோலி கோல்டன் டக் அவுட்டாக, உடன் வந்த கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் இறுதி வரை நிலைத்தாா். கோலியை அடுத்து வந்த ரஜத் பட்டிதாா் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 48 ரன்கள் சோ்த்தாா். 4-ஆவது வீரராக களம் புகுந்த கிளென் மேக்ஸ்வெல் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 33 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

ஓவா்கள் முடிவில் டூ பிளெஸ்ஸிஸ் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 73, தினேஷ் காா்த்திக் 8 பந்துகளில் 1 பவுண்டரி, 4 சிக்ஸா்களுடன் 30 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஹைதராபாத் பௌலிங்கில் ஜெகதீசா சுசித் 2, காா்த்திக் தியாகி 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் ஆடிய ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 58 ரன்கள் அடித்தாா். எய்டன் மாா்க்ரம் 21, நிகோலஸ் பூரன் 19 ரன்களுக்கு வெளியேற்றப்பட, இதர விக்கெட்டுகள் வரிசையாக சொற்ப ரன்களுக்கு சரிக்கப்பட்டன. முதல் ஓவரிலேயே கேப்டன் கேன் வில்லியம்சன், அபிஷேக் சா்மா டக் அவுட்டாகினா். பெங்களூா் அணியில் சிறப்பாகப் பந்துவீசிய வனிந்து ஹசரங்கா 5 விக்கெட்டுகள் சாய்க்க, ஜோஷ் ஹேஸில்வுட் 2, கிளென் மேக்ஸ்வெல் 1 விக்கெட் கைப்பற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com