முதல் ஓவரில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் வீரர் யார்?
By DIN | Published On : 12th May 2022 08:26 AM | Last Updated : 12th May 2022 08:26 AM | அ+அ அ- |

எந்த ஓர் அணியாக இருந்தாலும் எதிரணியின் விக்கெட்டை முதல் ஓவரில் எடுக்கவே விரும்பும்.
பவர்பிளேயில் அதிக விக்கெட்டுகள் எடுத்துவிட்டால் நிம்மதியாக ஆட்டத்தைத் தொடரலாம்.
இந்த விதத்தில் மிகப்பெரிய சாதனையாளராக உள்ளார் டிரெண்ட் போல்ட். பவர்பிளேயில் அதிக விக்கெட்டுகள் எடுக்கக் கூடியவர் என்பதற்காகவே இவரைத் தேர்வு செய்ய ஏலத்தில் அணிகள் போட்டியிடும்.
இந்தமுறை ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் போல்ட் மீண்டும் ஆரம்ப ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்து வருகிறார். இந்த வருடம் 11 ஆட்டங்களில் விளையாடி மொத்தமாக 10 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எகானமி - 8.33.
ஐபிஎல் போட்டியில் 2020 முதல், முதல் ஓவரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் போல்ட். அடுத்த இடத்தில் உள்ள வீரர்கள் மிகவும் பின்தங்கியுள்ளார்கள்.
2020 முதல், முதல் ஓவரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்
13 - டிரெண்ட் போல்ட்
5 - ஜோஃப்ரா ஆர்ச்சர்
4 - தீபக் சஹார்
4 - முகமது ஷமி
4 - முகேஷ் செளத்ரி
4 - உமேஷ் யாதவ்
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G