முகப்பு விளையாட்டு ஐபிஎல்
ஐபிஎல் வரலாற்றிலேயே மோசம்: ஹேசில்வுட்டுக்கே இந்த நிலைமை!
By DIN | Published On : 14th May 2022 01:26 PM | Last Updated : 14th May 2022 01:26 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் அதிக ரன்களைக் கொடுத்த ஜோஷ் ஹேசில்வுட் மோசமான சாதனைக்குச் சொந்தக்காரராகியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனின் நேற்றைய (வெள்ளிக்கிழமை) ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. முதல் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது.
இதில் 100 ரன்களை ஹேசில்வுட் மற்றும் முகமது சிராஜ் ஓவர்களிலேயே விளாசியுள்ளது பஞ்சாப். 4 ஓவர் வீசிய ஹேசில்வுட் விக்கெட் வீழ்த்தாமல் 64 ரன்களைக் கொடுத்துள்ளார். அவர் தனது முதல் ஓவரில் 22 ரன்களும், கடைசி ஓவரில் 24 ரன்களும் வழங்கியுள்ளார்.
இதையும் படிக்க | கடவுளிடம் நீதி கேட்ட விராட் கோலி: ரசிகர்கள் அதிர்ச்சி!
இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக ரன்களைக் கொடுத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் என்ற மோசமான சாதனைக்கு ஹேசில்வுட் சொந்தக்காரராகியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனிலும் இதுவே மோசமான பந்துவீச்சு.
இதற்கு முன்பு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்காக அதிக ரன்களைக் கொடுத்த வீரராக ஷேன் வாட்சன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆட்டத்தில் சிராஜ் 2 ஓவர் வீசி விக்கெட் வீழ்த்தாமல் 36 ரன்களைக் கொடுத்துள்ளார். இறுதியில் பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது.