ஐபிஎல்: கடைசிக்கட்ட ஓவர்களில் குறைவாக ரன்கள் கொடுக்கும் பந்துவீச்சாளர் யார்?
By DIN | Published On : 16th May 2022 03:07 PM | Last Updated : 16th May 2022 03:07 PM | அ+அ அ- |

அர்ஷ்தீப் சிங்
ஐபிஎல் 2022 போட்டியில் கடைசி 4 ஓவர்களில் (16-20) பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங் குறைவான ரன்கள் கொடுத்து அசத்தியுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் முதல் 6 ஓவர்களுக்கு ரன்கள் எடுப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல கடைசி நான்கைந்து ஓவர்களில் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிப்பதும் மிக முக்கியம். எதிரணியின் அதிரடி ஆட்டத்தைத் தடுத்து நிறுத்துவது எளிதான காரியமல்ல. பல பந்துவீச்சாளர்கள் தோற்பது கடைசி ஓவர்களில் தாம். இதனால் தான் பல பந்துவீச்சாளர்களைக் கடைசி ஓவர்களில் பந்துவீச அழைக்க மாட்டார்கள்.
இந்த வருடப் போட்டியில் கடைசிக்கட்ட ஓவர்களில் (16-20) குறைவாக ரன்கள் கொடுத்த (குறைந்தபட்சம் 10 ஓவர்கள்) பந்துவீச்சாளர்களில் பஞ்சாப் அணியின் அர்தீப் சிங்குக்கே முதலிடம்.
1. அர்ஷ்தீப் சிங், எகானமி - 7.14
2. பும்ரா, எகானமி - 7.46
3. புவனேஸ்வர் குமார்,எகானமி - 9.08
4. பிராவோ, எகானமி - 9.16
5. ஹர்ஷல் படேல், எகானமி - 9.46

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...