பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் யார்?
By DIN | Published On : 16th May 2022 02:55 PM | Last Updated : 16th May 2022 02:55 PM | அ+அ அ- |

ஐபிஎல் 2022 போட்டியில் பவர்பிளே ஓவர்களில் குஜராத்தின் ஷமியும் சிஎஸ்கேவின் முகேஷ் செளத்ரியும் அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள்.
டி20 கிரிக்கெட்டில் பவர்பிளே ஓவர்களில் (1-6) அதிக ரன்கள் எடுப்பது அவசியமானது. ஓர் அணி அதிக ஸ்கோரை எடுக்க ஆசைப்பட்டால் அதற்கான வேலைகளை பவர்பிளே ஓவர்களில் இருந்து தொடங்க வேண்டும். அதேபோல எதிரணியைக் குறைந்த ரன்களுக்குக் கட்டுப்படுத்த வேண்டுமென்றாலும் பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுக்க வேண்டும். விக்கெட்டுகளை வீழ்த்தினாலே ரன்கள் எடுப்பதையும் குறைத்து விட முடியும்.
இந்த வருட ஐபிஎல் போட்டியில் பவர்பிளே ஓவர்களில் ஷமியும் முகேஷ் செளதிரியும் அசத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர், அனுபவம் வாய்ந்தவர். இன்னொருவர், புதுமுகம். இருவருடைய பந்துவீச்சுகளும் எதிரணிகளுக்குப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளன.
பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள்
1. ஷமி, 11 விக்கெட்டுகள், எகானமி - 5.96
2. முகேஷ் செளத்ரி, 11 விக்கெட்டுகள், எகானமி - 8.41
3. ரபாடா, 9 விக்கெட்டுகள், எகானமி - 8.04
4. பிரசித் கிருஷ்ணா, 8 விக்கெட்டுகள், எகானமி - 6.33
5. உமேஷ் யாதவ், 8 விக்கெட்டுகள், எகானமி - 6.10