ஆர்சிபி அணி 200+ ரன்கள் இலக்கை கடைசியாக எப்போது விரட்டியது?
By DIN | Published On : 16th May 2022 11:39 AM | Last Updated : 16th May 2022 11:39 AM | அ+அ அ- |

ஐபிஎல் போட்டியில் 200க்கும் அதிகமான ரன்கள் கொண்ட இலக்கை விரட்ட மிகவும் சிரமப்படுகிறது ஆர்சிபி அணி. இதனால் பல பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.
கடந்த வெள்ளியன்று மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சிபியை பஞ்சாப் 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை விரட்ட முடியாத ஆர்சிபி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்துத் தோல்வியடைந்தது.
ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி ஒருமுறை மட்டும் 200 மற்றும் அதற்கும் அதிகமான ரன்களை வெற்றிகரமாக விரட்டியுள்ளது. மேலும் இன்னொருமுறை (2016-ல் சன்ரைசர்ஸுக்கு எதிராக) இலக்கை விரட்டும்போது 200 ரன்கள் எடுத்தாலும் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
2010-ல் பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் 204 ரன்கள் என்கிற இலக்கை 18.5 ஓவர்களில் அடைந்தது ஆர்சிபி. இது ஒன்றுதான் இலக்கை விரட்டும்போது அந்த அணி 200-க்கும் அதிகமாக ரன்களை எடுத்து வெற்றி பெற்ற ஆட்டம். மற்றபடி சமீபத்திய ஆட்டம் வரை 200 ரன்களுக்கும் அதிகமான இலக்கை ஆர்சிபி அடைந்ததேயில்லை.
இதற்கு இரு காரணங்கள்.
1. சிஎஸ்கே, மும்பை போல கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடி இலக்கை விரட்டும் வீரர்கள் ஆர்சிபியிடம் இல்லை.
2. பந்துவீச்சாளர்கள் முதலில் பந்துவீசும்போது அதிகமாக ரன்களைக் கொடுத்து விடுகிறார்கள். இதனால் கடினமான இலக்கை விரட்டுவது ஆர்சிபிக்கு எளிதாக இருப்பதில்லை.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...