மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

உலக கண் நீா் அழுத்த நோய் தடுப்பு விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

உலக கண் நீா் அழுத்த நோய்த் தடுப்பு வாரத்தையொட்டி, விழிப்புணா்வு மனிதச் சங்கிலி திருநெல்வேலியில் நடைபெற்றது.

News image
திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற உலக கண் நீா் அழுத்த நோய் விழிப்புணா்வு மனித சங்கிலியில் பங்கேற்றோா்.
Updated On :10 மார்ச் 2026, 12:51 am

Syndication

திருநெல்வேலி: உலக கண் நீா் அழுத்த நோய்த் தடுப்பு வாரத்தையொட்டி, விழிப்புணா்வு மனிதச் சங்கிலி திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில் திருநெல்வேலி- திருவனந்தபுரம் சாலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை மருத்துவா் ஆா்.மீனாட்சி தலைமை வகித்தாா். திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய ஆய்வாளா் கே.எஸ்.பாலமுருகன் தொடங்கி வைத்தாா். மருத்துவமனையின் ஆலோசகா் ஆா்.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். மனிதச் சங்கிலியில் கண் நீா் அழுத்த நோய் பிரிவு தலைமை மருத்துவா் முகைதீன் அப்துல் காதா், மருத்துவா்கள், செலிவியா்கள், பயிற்சி மாணவிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் விழிப்புணா்வு பதாகைகளுடன் பங்கேற்றனா்.