மும்பையின் வெற்றிக்காக வேண்டிக்கொள்ளும் நான்கு அணிகள்!

சனிக்கிழமையன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை - தில்லி அணிகள் மோதுகின்றன.
மும்பையின் வெற்றிக்காக வேண்டிக்கொள்ளும் நான்கு அணிகள்!

சனிக்கிழமையன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை - தில்லி அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் மட்டும் தில்லி வெற்றி பெற்றுவிட்டால் அந்த அணி 16 புள்ளிகள் பெற்றுவிடும். பிளேஆஃப்புக்கும் தகுதி பெற்றுவிடும். அதேசமயம் நான்கு அணிகள் பிளேஆஃப் வாய்ப்பை இழந்துவிடும். ஆம். ஒரே ஆட்டத்தின் முடிவால் நான்கு அணிகள் பிளேஆஃப் வாய்ப்பை இழக்கவுள்ளன. 

ஞாயிறன்று கடைசி லீக் ஆட்டமாக சன்ரைசர்ஸ் - பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சனிக்கிழமை தில்லி வெற்றி பெற்றுவிட்டால் ஞாயிறன்று எந்த அணி வெற்றி பெற்றாலும் பிளேஆஃப்புக்குச் செல்ல முடியாது. ஏனெனில் சன்ரைசர்ஸ் - பஞ்சாப்  ஆகிய இரு அணிகளாலும் லீக் சுற்றின் முடிவில் அதிகபட்சமாக 14 புள்ளிகள் மட்டுமே பெற முடியும். இப்போது ஏற்கெனவே மூன்று அணிகள் 16 மற்றும் அதற்கு அதிகமான புள்ளிகளைக் கொண்டுள்ளன. இதில் தில்லியும் 16 புள்ளிகள் பெற்றுவிட்டால் சன்ரைசர்ஸ் - பஞ்சாப் அணிகளின் கதை முடிந்ததாகிவிடும்.  

அதேபோல தில்லியின் வெற்றியால் ஆர்சிபி, கேகேஆர் அணிகளும் பிளேஆஃப்புக்குத் தகுதி பெறாமல் வெளியேறி விடும். கேகேஆர் அணியால் அதிகபட்சமாக 14 புள்ளிகள் மட்டுமே பெற முடியும். ஆர்சிபி அணி கடைசி ஆட்டத்தில் வென்றால் 16 புள்ளிகளைப் பெற்றுவிடும். ஆனால் தில்லி அணியின் நெட்ரன்ரேட்டைத் தாண்டுவது கடினம். இதனால் ஆர்சிபிக்கும் தில்லி அணியின் வெற்றி சிரமத்தையே தரும். 

ஏற்கெனவே மும்பை, சென்னை அணிகளால் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற முடியாது. இந்நிலையில் சனிக்கிழமையன்று நடைபெறும் மும்பை - தில்லி ஆட்டம் தான் நான்கு அணிகளின் தலைவிதியை நிர்ணயம் செய்யப் போகிறது. இந்த ஆட்டத்தில் மட்டும் மும்பை வெற்றி பெற்றுவிட்டால் சன்ரைசர்ஸ், பஞ்சாப், ஆர்சிபி, கேகேஆர் ஆகிய நான்கு அணிகளுக்கும் நிம்மதியாக இருக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com