
ஐபிஎல் 2022 போட்டியில் மும்பை அணிக்கு இன்னும் இரு ஆட்டங்களே மீதமுள்ள நிலையில் புதிய வீரரைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் போட்டியை ஐந்து முறை வென்ற மும்பை அணி, ஆகாஷ் மத்வால் என்கிற வீரரை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்துள்ளது. சூர்யகுமார் யாதவ், காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளதால் புதிய வீரரைத் தேர்வு செய்துள்ளதாக மும்பை அணி விளக்கம் அளித்துள்ளது. ஏற்கெனவே வலைப்பயிற்சிக்கான வீரர்களில் ஒருவராக ஆகாஷ் இருந்த நிலையில் தற்போது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
உத்தரகண்ட் அணியைச் சேர்ந்த 28 வயது வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால், 2019 முதல் அந்த அணிக்காக விளையாடி வருகிறார்.
ஐபிஎல் 2022 போட்டியில் மும்பை அணி 12 ஆட்டங்களில் 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியுடன் மோதுகிறது.
SQUAD UPDATE
â Mumbai Indians (@mipaltan) May 16, 2022
Akash Madhwal replaces Suryakumar Yadav for the rest of the 2022 season.
Read more #OneFamily #DilKholKe #MumbaiIndianshttps://t.co/mJsXkFAkbD
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








