ஐபிஎல் பிளேஆஃப் வாய்ப்பை இழந்த மூன்று முன்னாள் சாம்பியன்கள்

ஐபிஎல் போட்டியை அதிகமுறை வென்ற மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய அணிகள் இந்த வருடம் பிளேஆஃப் வாய்ப்பை இழந்துள்ளன.
கேகேஆர் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் (இடது)
கேகேஆர் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் (இடது)
Updated on
1 min read

ஐபிஎல் போட்டியை அதிகமுறை வென்ற மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய அணிகள் இந்த வருடம் பிளேஆஃப் வாய்ப்பை இழந்துள்ளன.

மும்பை அணி 5 முறையும் சிஎஸ்கே 4 முறையும் கேகேஆர் அணி 2 முறையும் ஐபிஎல் கோப்பையை அதிகமாக வென்றுள்ளன.

முதல்முறையாக இந்த மூன்று அணிகளும் இல்லாமல் பிளேஆஃப் சுற்று இந்த வருடம் நடைபெறவுள்ளது.

தொடர் தோல்விகளால் மும்பை முதலில் பிளேஆஃப் வாய்ப்பை இழந்தது. அடுத்ததாக சிஎஸ்கே வெளியேறியது. இப்போது கொல்கத்தாவும் இவர்களுடன் இணைந்துகொண்டது.

கேகேஆர் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது லக்னெள அணி. முதலில் பேட்டிங் செய்த லக்னெள அணி, நம்பமுடியாத விதத்தில் 20 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 210 ரன்கள் எடுத்தது. குயிண்டன் டி காக் 70 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 140 ரன்களும் ராகுல் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 68 ரன்களும் எடுத்தார்கள். இலக்கை நன்கு விரட்டினார்கள் கேகேஆர் பேட்டர்கள். நிதிஷ் ராணா, ஷ்ரேயஸ் ஐயர், சாம் பில்லிங்ஸ், ரிங்கு சிங், சுநீல் நரைன் ஆகியோர் அதிரடியாக விளையாடி லக்னெள அணிக்கு நெருக்கடி அளித்தார்கள். ஸ்டாய்னிஸ் கடைசி ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவை என்கிற நிலையில் 1 பவுண்டரியும் 2 சிக்ஸர்களும் அடுத்தடுத்து அடித்தார் ரிங்கு சிங். 2 பந்துகளில் 3 ரன்கள் தேவை எனும்போது 40 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். கடைசிப் பந்தில் உமேஷ் யாதவை போல்ட் செய்து லக்னெள அணிக்குப் பரபரப்பான வெற்றியை அளித்தார் ஸ்டாய்னிஸ்.

இந்தத் தோல்வியினால் 14 ஆட்டங்களில் 12 புள்ளிகள் மட்டும் எடுத்த கேகேஆர் அணி, பிளேஆஃப் வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து 3-வது அணியாக வெளியேறியுள்ளது. 

ஐபிஎல் கோப்பையை அதிகமுறை வென்ற மூன்று அணிகளும் பிளேஆஃப் வாய்ப்பை இழந்ததுடன் ஐபிஎல் போட்டியில் 2-வது முறையாக முந்தைய வருட இறுதிச்சுற்றில் விளையாடிய இரு அணிகளும் பிளேஆஃப்புக்குத் தகுதி பெறவில்லை. 

2015 (கேகேஆர், பஞ்சாப் பிளேஆஃப்புக்குத் தகுதி பெறவில்லை.)
2022 (சிஎஸ்கே, கேகேஆர் பிளேஆஃப்புக்குத் தகுதி பெறவில்லை.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com