சாதித்த பேட்டர்கள்: ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக...

ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக ஒரு வருடத்தில் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன.
சாதித்த பேட்டர்கள்: ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக...

ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக ஒரு வருடத்தில் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன.

இதுவரை 1001 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்பு 2018-ல் ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடைபெற்றபோது அதிகபட்சமாக 872 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. அதன் சாதனையை இந்த வருட ஐபிஎல் முறியடித்து விட்டது. சிக்ஸர்கள் அடிப்பதில் பேட்டர்களின் திறமை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இந்தப் புள்ளிவிவரம் அதனை நன்கு உறுதிப்படுத்துகிறது. 

அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 37 சிக்ஸர்களுடன் பட்லர் முதலிடத்திலும் லிவிங்ஸ்டன் 34 சிக்ஸர்களுடன் 2-ம் இடத்திலும்  32 சிக்ஸர்களுடன் ரஸ்ஸல் 3-ம் இடத்திலும்  உள்ளார்கள். 

சிஎஸ்கே அணியில் ஷிவம் டுபே அதிகபட்சமாக 16 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அடுத்ததாக ராயுடு 15 சிக்ஸர்களும் உத்தப்பா 14 சிக்ஸர்களும் அடித்துள்ளார்கள். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com