இந்திய அணிக்குத் தேர்வாகாத வருத்தம்: என்ன சொன்னார் நிதிஷ் ராணா?

ஐபிஎல் ஏலத்தில் ரூ. 8 கோடிக்கு ராணாவை கேகேஆர் அணி தேர்வு செய்தது. 2018 முதல் கேகேஆர் அணிக்காக அவர் விளையாடி வருகிறார். 
இந்திய அணிக்குத் தேர்வாகாத வருத்தம்: என்ன சொன்னார் நிதிஷ் ராணா?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர், இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் ஆகியவற்ருக்கான இரு இந்திய அணிகள் நேற்று அறிவிக்கப்பட்டன. 

இரு அணிகளிலும் கொல்கத்தா வீரர் நிதிஷ் ராணாவுக்கு இடம் கிடைக்கவில்லை. ஐபிஎல் ஏலத்தில் ரூ. 8 கோடிக்கு ராணாவை கேகேஆர் அணி தேர்வு செய்தது. 2018 முதல் கேகேஆர் அணிக்காக அவர் விளையாடி வருகிறார். 

தில்லியைச் சேர்ந்த 28 வயது நிதிஷ் ராணா, ஐபிஎல் 2022 போட்டியில் கேகேஆர் அணிக்காக 14 ஆட்டங்களில் விளையாடி, 2 அரை சதங்களுடன் 361 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 143.82. 22 சிக்ஸர்கள். 2016 முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடும் ராணா,ஒருமுறை கூட 400 ரன்களை எடுத்ததில்லை. 

நேற்று அறிவிக்கப்பட்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் ராணாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தன் வருத்தத்தை ட்விட்டரில் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.

நிலைமை விரைவில் மாறும் என இந்திய அணிக்குத் தேர்வாகாததைக் கொண்டு தனது உணர்வுகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார். கடந்த வருடம் இந்திய அணி இலங்கைக்குச் சென்றபோது இந்திய அணியின் 2 டி20 ஆட்டங்களில் ராணா பங்கேற்றார். எனினும் மொத்தமாக 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். 

ஐபிஎல் போட்டியில் அதிரடியாக விளையாடும் வீரர்களில் ராணாவும் ஒருவர். இந்த வருட ஐபிஎல்-லில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் இந்திய வீரர்களில் திரிபாதி, சஞ்சு சாம்சன் சாம்சன் மட்டுமே இவரை விடவும் அதிக ஸ்டிரைக் ரேட்டை வைத்துள்ளார்கள். ஆனால் அவர்களுக்கே வாய்ப்பில்லை எனும்போது ராணா இந்திய அணிக்குத் தேர்வாவதற்கு இன்னும் சாதிக்க வேண்டும் எனத் தேர்வுக்குழு எண்ணியிருக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com