
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் விரும்பத்தகாத சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (ஏப்ரல் 1) நடைபெற்று வரும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் மும்பை முதலில் பேட் செய்தது. மும்பை அணியின் முன்வரிசை ஆட்டக்காரர்கள் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா அவர் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். இன்றையப் போட்டியில் அவர் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்ததன் மூலம் ஐபிஎல் தொடரில் விரும்பத்தகாத சாதனை ஒன்றை அவர் சமன் செய்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை டக் அவுட்டான வீரரான தினேஷ் கார்த்திக்கின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இதுவரை தினேஷ் கார்த்திக் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ஐபிஎல் போட்டிகளில் 17 முறை டக் அவுட் ஆகியுள்ளனர்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள்
ரோஹித் சர்மா - 17 முறை
தினேஷ் கார்த்திக் - 17 முறை
கிளன் மேக்ஸ்வெல் - 15 முறை
பியூஸ் சாவ்லா - 15 முறை
மந்தீப் சிங் - 15 முறை
சுனில் நரைன் - 15 முறை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.