கார் விபத்துக்குப் பிறகு முதல் அரைசதம்; ரிஷப் பந்த் கூறியது என்ன?

கார் விபத்துக்குப் பிறகு தனது முதல் அரைசதத்தை ரிஷப் பந்த் நேற்று (மார்ச் 31) பதிவு செய்தார்.
ரிஷப் பந்த்
ரிஷப் பந்த்படம் | ஐபிஎல்

கார் விபத்துக்குப் பிறகு தனது முதல் அரைசதத்தை ரிஷப் பந்த் நேற்று (மார்ச் 31) பதிவு செய்தார்.

ஐபிஎல் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் அதிரடியாக 32 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அசத்தினார். கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த், அதன்பின் முதல் முறையாக அரைசதம் எடுத்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ரிஷப் பந்த்
கிறிஸ் கெயிலின் சாதனையை சமன் செய்த டேவிட் வார்னர்!

இந்த நிலையில், கார் விபத்துக்குப் பிறகு முதல் முறையாக அரைசதம் விளாசியது குறித்து ரிஷப் பந்த் பேசியுள்ளார்.

கார் விபத்துக்குப் பிறகு அரைசதம் அடித்தது குறித்து ரிஷப் பந்த் பேசியதாவது: ஒன்றரை ஆண்டுகளாக இதற்காக காத்திருந்தேன். ஒரு கிரிக்கெட்டராக நான் இன்னும் புதிய விஷயங்களை கற்றுக் கொண்டே இருக்கிறேன். என்ன நடந்தாலும் மைதானத்தில் வந்து நன்றாக விளையாடுவேன் என்ற தன்னம்பிக்கை எனக்குள் இருந்தது.

நன்றாக விளையாட வேண்டும் என்பதைத் தவிர வேறு எதையும் நான் நினைக்கவில்லை. ஒரு கிரிக்கெட்டராக எனது 100 சதவிகிதத்தை கொடுக்க வேண்டியுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்ததால், ஆரம்பப் போட்டிகளில் சரியாக விளையாட முடியவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com