அதிவேகப் பந்துவீச்சு; 2 ஆட்ட நாயகன் விருதுகள்: அசத்தும் இளம் வீரர்!

லக்னௌ அணியின் இளம் வீரர் மயங்க் யாதவ் இந்த ஐபிஎல் தொடரின் அதிவேகப் பந்தை வீசியுள்ளார்.
மயங்க் யாதவ்
மயங்க் யாதவ்படங்கள்: எல்எஸ்ஜி/ எக்ஸ்

ஐபிஎல் போட்டியின் 15-ஆவது ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸ் 28 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை அதன் மண்ணிலேயே செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

லக்னெள பேட்டிங்கில் குவின்டன் டி காக், நிகோலஸ் பூரனும், பெளலிங்கில் மயங்க் யாதவும் அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

லக்னௌ அணியின் இளம் வீரர் மயங்க் யாதவ் இந்த ஐபிஎல் தொடரின் அதிவேகமான பந்தை வீசியுள்ளார். 157 கி.மீ/ மணி வேகத்தில் பந்து வீசி சாதனை படைத்துள்ளார். வேகம் மட்டுமில்லாமல் கட்டுப்பாடும் இருப்பதாக முன்னாள் வீரர்கள் புகழ்கிறார்கள்.

மயங்க் யாதவ்
டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இலங்கை: டபிள்யூடிசி தரவரிசையில் முன்னேற்றம்!

முதல் போட்டியில் 3 விக்கெட் 27 ரன்கள், 2வது போட்டியில் 3 விக்கெட் 14 ரன்கள் எடுத்து தனது முதல் 2 போட்டிகளிலும் ஆட்ட நாயகன் விருது வாங்கி அசத்தி வருகிறார் இளம் இந்திய வீரர் மயங்க் யாதவ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com