டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இலங்கை: டபிள்யூடிசி தரவரிசையில் முன்னேற்றம்!

வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் 192 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
இலங்கை அணி
இலங்கை அணி படம்: ஐசிசி
Published on
Updated on
1 min read

வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் 192 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

கடந்த சனிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில், முதல் இன்னிங்ஸில் இலங்கை 531 ரன்கள் குவிக்க, வங்கதேசம் 178 ரன்களுக்கே சுருண்டது. இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 157/7 க்கு டிக்ளேர் செய்தது.

511 ரன்களை இலக்காகக் கொண்டு 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேசம், செவ்வாய்க்கிழமை முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்திருந்தது.

இலங்கை அணி
நாடு திரும்பிய முஸ்தஃபிசூர்: சிஎஸ்கேவுக்கு பின்னடைவு?

இந்நிலையில், கடைசி நாளான இன்று வங்கதேசம் 318க்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மஹதி ஹாஸன் 81 ரன்கள் எடுத்தார். இலங்கை சார்பில் லஹிரு குமாரா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். கமிந்து மெண்டிஸ் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

இந்த வெற்றியின் மூலம் 2-0 என டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணி.

இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி 4ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. முதலிடத்தில் இந்திய அணியும் 2ஆம் இடத்தில் ஆஸி. அணியும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

டபிள்யூடிசி தரவரிசை
டபிள்யூடிசி தரவரிசைdinmani online

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com