16 வருடமாக ஆர்சிபி செய்யும் தவறு இதுதான்: அம்பத்தி ராயுடு விளாசல்!

ஆர்சிபி அணியின் தோல்விக்கான காரணத்தை குறித்து அம்பத்தி ராயுடு பேசியுள்ளார்.
16 வருடமாக ஆர்சிபி செய்யும் தவறு இதுதான்: அம்பத்தி ராயுடு விளாசல்!
படங்கள், பிடிஐ, சிஎஸ்கே/ எக்ஸ்

ஆர்சிபி அணியின் தோல்விக்கான காரணத்தை குறித்து அம்பத்தி ராயுடு பேசியுள்ளார்.

4 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி அணி 3 போட்டிகளில் தோல்வியை தழுவி புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது. கடந்த 15 வருடமாக விளையாடியும் ஒரு ஐபிஎல் கோப்பையையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணத்தினால் விராட் கோலி கேப்டன்சியில் இருந்து விலக டு பிளெஸ்ஸி கேப்டனாக பொறுப்பேற்றார். அப்போதும் ஆர்சிபியின் தோல்வி பயணம் முடியவில்லை.

16 வருடமாக ஆர்சிபி செய்யும் தவறு இதுதான்: அம்பத்தி ராயுடு விளாசல்!
அதிவேகப் பந்துவீச்சு; 2 ஆட்ட நாயகன் விருதுகள்: அசத்தும் இளம் வீரர்!

இது குறித்து முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடு கூறியதாவது:

ஆர்சிபி அணியின் பந்து வீச்சாளர்கள் எப்போதுமே குறிப்பிட்ட அளவினை விட அதிகமாக ரன்களை வாரி வழங்குகிறார்கள். பேட்டர்களை குறைவான ரன்களையே அடிக்கிறார்கள். அழுத்தமான நேரங்களில் யார் பேட்டிங் செய்கிறார்கள்? இளம் இந்திய வீரர்களும் தினேஷ் கார்த்திக்கும்தான். இந்த ஐபிஎல் தொடரின் சர்வதேச வீரர்கள் அனைவரும் அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் (ஓய்வறை) இருக்கிறார்கள்.

மஹிபால் லோம்ரோர் இம்பாக்ட் வீரராக களமிறங்கி 230 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுகிறார். தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தினால்தான் ஒரு போட்டியாவது ஆர்சிபி வென்றிருக்கிறது. அழுத்தமான சூழ்நிலைகளில் பெரிய வீரர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். 16 வருடமாக இதுதான் ஆர்சிபியின் கதை.

16 வருடமாக ஆர்சிபி செய்யும் தவறு இதுதான்: அம்பத்தி ராயுடு விளாசல்!
ஐபிஎல் தொடரிலிருந்து லக்னௌ அணியின் வேகப்பந்து வீச்சாளர் விலகல்!

பவர்பிளேவில் எளிதாக ரன்களை அடிக்க முடியும். மூத்த வீரர்கள் அங்கு களமிறங்கி ரன்களை அடிப்பதில் பெரிய விசயமில்லை. அது எளிதானது. கேக்கின் மீதிருக்கும் கிரீமினை டாப் ஆர்டர்கள் சுவைத்து விட்டு மீதியை இளம் வீரர்களுக்கு அளிப்பதனாலயே ஆர்சிபி அணி இதுவரை கோப்பையை வெல்லவில்லை.

203 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4348 ரன்கள் எடுத்துள்ளார் அம்பத்தி ராயுடு. ஒரு சதம், 22 அரைசதம் இதில் அடங்கும். தற்போது ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடு வெளிநாட்டு தொடர்களில் விளையாடி வருகிறார். அரசியலில் ஆர்வம் இருப்பதால் இனிவரும் காலங்களில் அரசியல் களத்தில் அவரை சந்திக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com