மும்பை இந்தின்ஸுடன் இணைந்த சூர்யகுமார் யாதவ்!

மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சூர்யகுமார் யாதவ் இணைந்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்படம் | ஐபிஎல்

காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த சூர்யகுமார் யாதவ், குணமடைந்து மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துள்ளது அந்த அணிக்கு வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நடப்பு ஐபிஎல் தொடர் இதுவரை சிறப்பானதாக அமையவில்லை. இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று போட்டிகளிலுமே தோல்வியைத் தழுவியது.

சூர்யகுமார் யாதவ்
குல்தீப் யாதவுக்கு ஓய்வளிக்க தில்லி கேப்பிடல்ஸ் முடிவு!

இந்த நிலையில், காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த சூர்யகுமார் யாதவ், குணமடைந்து மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துள்ளது அந்த அணிக்கு வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் சூர்யகுமார் யாதவ் இன்று (ஏப்ரல் 5) தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டார். மும்பை வீரர்கள் பயிற்சி முகாமுக்கு வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே சூர்யகுமார் யாதவ் தனது பயிற்சியை தொடங்கிவிட்டார். அவர் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். பந்துகளை மைதானத்தில் நாலாபுறத்திலும் அடித்து பயிற்சி மேற்கொண்டார்.

சூர்யகுமார் யாதவ்
பென் ஸ்டோக்ஸின் முடிவு சரியானது: இங்கிலாந்து முன்னாள் வீரர்

மும்பை இந்தியன்ஸ் அணி தனது அடுத்தப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com