தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

பென் ஸ்டோக்ஸின் முடிவு சரியானது: இங்கிலாந்து முன்னாள் வீரர்

டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ள பென் ஸ்டோக்ஸை ஆதரித்து ஸ்டுவர்ட் பிராட் பேசியுள்ளார்.

News image

பென் ஸ்டோக்ஸ்

Updated On :5 ஏப்ரல் 2024, 4:12 pm IST

டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ள பென் ஸ்டோக்ஸை ஆதரித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் பிராட் பேசியுள்ளார்.

உடல்தகுதியை மேம்படுத்துவதன் காரணமாக எதிர்வரும் டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் பென் ஸ்டோக்ஸ் அண்மையில் அறிவித்தார்.

இந்த நிலையில், பென் ஸ்டோக்ஸின் முடிவை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் பிராட் ஆதரித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஸ்டுவர்ட் பிராட்

ஸ்டுவர்ட் பிராட்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பென் ஸ்டோக்ஸ் அவரது நலனுக்காக என்ன முடிவு எடுத்தாலும், அது சரியான முடிவாகவே இருக்கும். அவரது கிரிக்கெட் பயணத்தில் மேற்கொண்ட நம்பமுடியாத சில முடிவுகள் அவருக்கு பலனளித்துள்ளது. அவர் மீண்டும் ஆல்ரவுண்டராக சிறப்பாக செயல்பட வேண்டும் என நினைக்கிறார். இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடினால், உடல் தகுதியில் கவனம் செலுத்துவது கடினம் எனத் தெரிந்ததால் உலகக் கோப்பையிலிருந்து விலகியுள்ளார். அவரது இந்த முடிவு சிறப்பான தெரிவே என்றார்.

உலகக் கோப்பைத் தொடர் ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.