கடின உழைப்புக்கு கிடைத்த பலன்; மனம் திறந்த அபிஷேக் சர்மா!

கடினமாக உழைத்ததால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிந்ததாக சன் ரைசர்ஸ் அணியின் அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.
அபிஷேக் சர்மா
அபிஷேக் சர்மா படம் | ஐபிஎல்

ஐபிஎல் தொடருக்கு முன்பு கடினமாக உழைத்ததால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிந்ததாக சன் ரைசர்ஸ் அணியின் அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா அதிரடியாக தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்தார். அதிரடியாக விளையாடிய அவர் 12 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அபிஷேக் சர்மா
தோல்விக்குப் பிறகு சிஎஸ்கே பயிற்சியாளர் பேசியது என்ன?

இந்த நிலையில், ஐபிஎல் தொடருக்கு முன்பு கடினமாக உழைத்ததால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிந்ததாக அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடருக்கு முன்னதாக கடினமாக உழைத்ததே சிறப்பாக விளையாடுவதற்கு காரணம். எனது அப்பா, யுவராஜ் சிங் மற்றும் பிரையன் லாரா ஆகியோருக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். பந்துவீச்சின்போது ஆடுகளம் மெதுவாக இருப்பதை உணர்ந்தோம். அதனால் பவர் பிளேவில் அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என நினைத்தோம் என்றார்.

அபிஷேக் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com