டி20 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் புதிய சாதனை!

டி20 கிரிக்கெட் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி
மும்பை இந்தியன்ஸ் அணிபடம் | ஐபிஎல்

டி20 கிரிக்கெட் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி
அடுத்தப் போட்டியில் விளையாடுவாரா மயங்க் யாதவ்?

நேற்றையப் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. டி20 போட்டிகளில் 150 வெற்றிகளைப் பதிவு செய்த முதல் அணி என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் படைத்துள்ளது.

டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகள் பெற்ற அணிகள் (சூப்பர் ஓவர் வெற்றிகளை தவிர்த்து)

மும்பை இந்தியன்ஸ் - 150 வெற்றிகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் - 148 வெற்றிகள்

இந்தியா - 144 வெற்றிகள்

லங்காஷைர் - 143 வெற்றிகள்

நாட்டிங்கம்ஷைர் - 143 வெற்றிகள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com