அதிரடி பேட்டிங்கின் ரகசியத்தைப் பகிர்ந்த சூர்யகுமார் யாதவ்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ் தனது அதிரடியான பேட்டிங் குறித்து மனம் திறந்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ் படம் |ஐபிஎல்

மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ் தனது அதிரடியான பேட்டிங் குறித்து மனம் திறந்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது.

இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவின் அதிரடியான ஆட்டத்தால், 197 ரன்கள் இலக்கை மும்பை இந்தியன்ஸ் வெறும் 15.3 ஓவர்களில் எட்டி அசத்தியது. அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார்.

சூர்யகுமார் யாதவ்
2027 உலகக் கோப்பையில் விளையாட விரும்புகிறேன்: ரோஹித் சர்மா

இந்த நிலையில், அதிரடியாக விளையாடக் கூடிய ஷாட்டுகளை தனது தசைகள் நினைவில் வைத்துள்ளதாகவும், வலைப்பயிற்சியில் அதிக நேரம் செலவிடுவதாகவும் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஃபீல்டிங் நிற்கவைக்கப்பட்டுள்ளதைப் பார்த்து அதற்கேற்ப ஷாட்டுகளை விளையாட முயற்சிக்கிறேன். புதுமையான ஷாட்டுகளை வலைப்பயிற்சியின்போது முயற்சிக்கிறேன். அந்த ஷாட்டுகளை எனது தசைகள் நினைவில் வைத்துள்ளன. ஆர்சிபிக்கு எதிராக நான் விளையாடிய அனைத்து ஷாட்டுகளுமே எனக்கு பிடித்திருந்தது. வான்கடேவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது எப்போதும் மகிழ்ச்சியைத் தரக்கூடியதே.

சூர்யகுமார் யாதவ்
ஹார்திக் பாண்டியாவை ரசிகர்கள் நேசிக்கும் நாள் வெகு தூரமில்லை: இஷான் கிஷன்
ஜஸ்பிரித் பும்ரா
ஜஸ்பிரித் பும்ராபடம் | ஐபிஎல்

தேசிய கிரிக்கெட் அகாடெமியில் குணமடைந்து வரும்போது உடலளவில் அங்கு இருந்தேன். ஆனால், மனதளவில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இருந்தேன்.பும்ரா சிறப்பாக பந்துவீசினார். கடந்த 2 - 3 ஆண்டுகளாக வலைப்பயிற்சியின்போது பும்ரா பந்துவீச்சில் ஒருபோதும் பேட் செய்ததே கிடையாது. அவரது பந்துவீச்சில் எனது பேட் உடைகிறது அல்லது எனது கால் உடைகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com