ஹார்திக் பாண்டியா
ஹார்திக் பாண்டியா படம் | ஐபிஎல்

ஹார்திக் பாண்டியாவை ரசிகர்கள் நேசிக்கும் நாள் வெகு தூரமில்லை: இஷான் கிஷன்

மும்பை அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவை ரசிகர்கள் விரைவில் நேசிக்கத் தொடங்குவார்கள் என இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ரசிகர்களின் வெறுப்புக்கு ஹார்திக் பாண்டியா ஆளானபோதிலும், அவர் ரசிகர்களின் அன்பைப் பெறும் சவாலை விரும்புவதாக மும்பை அணியின் இஷான் கிஷான் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த அணியின் புதிய கேப்டனாக ஹார்திக் பாண்டியாவை அந்த அணி நிர்வாகம் நியமித்தது. இதனால், ரசிகர்களின் வெறுப்புக்கு ஹார்திக் பாண்டியா ஆளானார். நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கப் போட்டிகளில் ரசிகர்களின் கேலி, கிண்டல்களுக்கு ஹார்திக் பாண்டியா ஆளானதைப் பார்க்க முடிந்தது.

ஹார்திக் பாண்டியா
2027 உலகக் கோப்பையில் விளையாட விரும்புகிறேன்: ரோஹித் சர்மா

இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் ரசிகர்களின் வெறுப்புக்கு ஹார்திக் பாண்டியா ஆளானபோதிலும், அவர் ரசிகர்களின் அன்பைப் பெறும் சவாலை விரும்புவதாக மும்பை அணியின் இஷான் கிஷான் தெரிவித்துள்ளார்.

இஷான் கிஷன்
இஷான் கிஷன்படம் | ஐபிஎல்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஹார்திக் பாண்டியா சவால்களை விரும்பக் கூடியவர். இதற்கு முன்பாகவும் இதுபோன்ற சவாலான சூழ்நிலைகளில் இருந்துள்ளார். ஹார்திக் பாண்டியா வெளிப்படையாக இதனை செய்யுங்கள், செய்யாதீர்கள் எனப் பேசுபவர் கிடையாது. ரசிகர்களின் வெறுப்பினை அவர் கண்டிப்பாக சவாலாக எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியோடு விளையாடுவார். சவால்களை எதிர்கொள்ள அவர் தயாராக இருக்கிறார். ஏனென்றால், ரசிகர்கள் மீது குறைகூற முடியாது. அப்படி கூறினால், அவர்கள் அவர்களது செயல்களுக்கு விளக்கம் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

ஹார்திக் பாண்டியா
அம்பயர் இந்தியன்ஸ்?: கிண்டலடிக்கும் ரசிகர்கள்!

ஹார்திக் பாண்டியாவைப் பற்றி தெரிந்ததால், அவர் கண்டிப்பாக ரசிகர்களின் வெறுப்பினை மகிழ்ச்சியுடன் சவாலாக எடுத்துக் கொண்டு பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுவார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். அதன்பிறகு ரசிகர்கள் அவரை மீண்டும் நேசிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்றார்.

நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூவை வீழ்த்தியதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் அதன் 2-வது வெற்றியைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com