தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு! மாலை நிலவரம்! (ஆக.21) எம்எல்ஏக்களுக்கு அரசுப் பணத்தில் ஏன் கார் வழங்க வேண்டும்? பெ. சண்முகம்முதல்வர் விஜய் சிரிப்பதைப் பார்க்க தனி ஸ்க்ரீன் வேண்டும்! தவெக எம்எல்ஏ கோரிக்கைதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வேண்டாம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு! எண்ணூரில் மீன்கள் செத்து மிதப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: இபிஎஸ்நீட் போராட்டத்தில் தாக்குதல் நடத்திய போலீஸார் மீது எஃப்ஐஆர் பதிய மறுப்பு: ராகுல் தர்னாஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க ஆணையம் பரிந்துரை!

ஹார்திக் பாண்டியா ஒரு கிளட்ச்..! இம்பாக்ட் வீரர் விருது விடியோ!

இம்பாக்ட் வீரர் விருது வென்ற ஹார்திக் பாண்டியா பேசியிருப்பதாவது...

Hardik Pandya's speech after winning the award.

விருது வென்ற பிறகு ஹார்திக் பாண்டியா பேசிய காட்சி. - படம்: பிசிசிஐ

Published On :7 மார்ச் 2026, 1:05 pm IST

டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இம்பாக்ட் வீரர் விருது வென்ற ஹார்திக் பாண்டியா, “ஹார்திக் பாண்டியா ஒரு கிளட்ச்” எனக் கூறியுள்ளார்.

கிளட்ச் என்பது அழுத்தம் மிகுந்த நேரத்தில் சிறப்பாக செயல்படுபவர் என ஜென்ஸி இளைஞர்களிடம் பேசப்படும் வார்த்தையாக இருக்கிறது.

வான்கடேவில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 253 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தல் சதம் அடித்து அசத்தினார். ஷிவம் துபே வீசிய கடைசி ஓவரில் பெத்தல் லாங் ஆன் பகுதியில் அடித்துவிட்டு 2 ரன்கள் ஓட முயற்சித்தார்.

எல்லைக் கோட்டருகில் ஃபீல்டிங்கில் இருந்த, ஹார்திக் பாண்டியா வேகமாகச் செயல்பட்டு கீப்பரிடம் எடுத்து வீச, சஞ்சு சாம்சன் சாமர்த்தியமாகச் செயல்பட்டு ரன் அவுட் செய்தார்.

இந்த அற்புதமான செயல்பாட்டிற்காக ஹார்திக் பாண்டியாவுக்கு ’இம்பாக்ட் பிளேயர்’ என்ற விருது கிடைத்துள்ளது. இந்த விருது வென்ற பிறகு அளித்த பேட்டியில், “ஹார்திக் பாண்டியா ஒரு கிளட்ச்” எனக் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட விடியோவில் ஹார்திக் பாண்டியா பேசியிருப்பதாவது:

வாழ்க்கையில் இரண்டு வழிகள் இருக்கின்றன. எனது இதயத் துடிப்பை அதிகரித்து, சரியாகச் செயல்படாமல் போவது; அதனால், நான் ஜென் மனநிலைக்குச் சென்றேன். இந்த மாதிரியான சூழ்நிலையில், நான் அமைதியாக இருப்பது அற்புதமாக இருக்கிறது.

ஃபீல்டிங்கில் இருந்து நான் ஒருவரை ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என்றால், அது ஜேக்கப் பெத்தல்தான். ஏனெனில் அவர் சிறப்பாக பேட்டிங் விளையாடினார். நான் அமைதியாக இருந்து, சரியாக பந்தினை கீப்பரிடம் ஸ்டம்பிற்கு அருகில் அடிக்க நினைத்தேன். அது சரியாக அமையாவிட்டாலும் அவர் ஆட்டமிழந்துவிட்டார்.

எனது மகன், மனைவி வந்திருந்ததால், நான் சிறப்பாக செயல்பட விரும்பினேன். இந்தத் தருணத்தை மிகவும் மகிழ்ந்தேன் என்றார்.

ஹார்திக் பாண்டியா இந்த டி20 உலகக் கோப்பையில் இதுவரை பேட்டிங்கில் 199 ரன்கள், பந்துவீச்சில் 8 விக்கெட்டிகள் எடுத்துள்ளார்.

Summary

Clutch is Hardik Pandya says Pandya after Impact Player of the award.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.