

இந்தியாவின் ஆல் - ரவுண்டர் ஹார்திக் பாண்டியா குறித்து முன்னாள் இந்திய தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா பெருமிதமாகப் பேசியுள்ளார்.
ஆகாஷ் சோப்ரா, “வரும் டி20 உலகக் கோப்பையில் ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்டியா இல்லாவிட்டால் இந்திய அணி முழுமைப் பெறாது” எனக் கூறியுள்ளார்.
இந்திய அணி நியூசிலாந்திடன் ஒருநாள் தொடரை இழந்தது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
முதல் போட்டி இன்று நாகபுரியில் நடைபெற இருக்கிறது. அடுத்த மாதம் 7ஆம் தேதி டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்க இருக்கின்றன.
உலகத்திலேயே ஒரேயொரு ஹார்திக் பாண்டியா
இந்நிலையில், ஹார்திக் பாண்டியா குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியதாவது:
ஹார்திக் பாண்டியா இல்லாமல் இந்திய அணி முழுமைப் பெறாது. ஒட்டுமொத்த உலகத்திலேயே ஒரேயொரு ஹார்திக் பாண்டியா மட்டும்தான் இருக்கிறார்.
பந்துவீச்சு, பேட்டிங்கில் ஹார்திக்கைப் போல இந்தியாவில் யாருமே இல்லை.
இன்னொருவர் கிடைக்க மாட்டார்
குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி நமக்குத் தேவை. ஆனால், நம்.8-ல் பேட்டர் தேவை.
12 வீரர்களையும் களத்தில் ஃபீல்டிங் செய்யவைக்க முடியாது. ஹார்திக் பாண்டியா மட்டுமே இதைச் செய்வார்.
தொடக்கத்தில் புதிய பந்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவார். இறுதி ஓவரில் பந்து வீசுவார். அவரால்தான் இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பை வென்றது.
ஹார்திக் பாண்டியா மட்டுமே இப்படியான செயலைச் செய்ய முடியும். இவரைப் போல இன்னொருவர் கிடைக்க மாட்டார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.