

பிபிஎல் நாக் அவுட் ஆட்டத்தில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி இந்த வெற்றியுடன் சேலஞ்சர்ஸ் சுற்றுக்குத் தகுதிப் பெற்றுள்ளது.
நாக் அவுட் சுற்றில் மெல்பர்ன் ஸ்டார்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின.
இந்தப் போட்டி மழையின் காரணமாக முதலில் 10 ஓவர்களாக மாற்றப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 10 ஓவர்களில் 114/ 5 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக பியூ வெப்ஸ்டர் 47 ரன்கள் எடுத்தார்.
அடுத்து மெல்பர்ன் அணி பேட்டிங் செய்தபோது 2 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது.
அதனால், இந்தப் போட்டி 7 ஓவர்களாக மீண்டும் மாற்றப்பட்டு, 85 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்தக் காரணத்தினால் மெல்பர்ன் அணியினர் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளானார்கள்.
கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவையாக இருக்க களத்தில் ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல் இருந்தார்கள். கடைசி ஓவரை மிட்செல் ஓவன் வீச, மெல்பர்ன் அணி இறுதியில் 22 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கடைசி ஓவரின் விவரங்கள்
1. ஸ்டாய்னிஸ் 6 ரன்கள்
2. வைட்
2. ஸ்டாய்னிஸ் ஆட்டமிழப்பு
3. ஹில்டன் கார்ட்ரைட் 4 ரன்கள்
4. ஹில்டன் கார்ட்ரைட் 4 ரன்கள்
5. ஹில்டன் கார்ட்ரைட் 6 ரன்கள்
6. ஹில்டன் கார்ட்ரைட் 1 ரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.