

பிபிஎல் தொடரில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி ஆறாவது முறையாக கோப்பையை வென்றது.
இந்தப் போட்டியில் தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் அதிகமான (44) ரன்களை குவித்தார்.
இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்ஸர் அணி 20 ஓவர்கள் முடிவில் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அடுத்து விளையாடிய பெர்த் அணி 17.3 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்து அபார வெற்றியடைந்தது.
இந்த வெற்றியுடன் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் பிபிஎல் வரலாற்றில் அதிகமுறை (6) கோப்பை வென்ற அணியாக சாதனையை நீட்டித்துள்ளது.
ஆட்ட நாயகனாக பந்துவீச்சாளர் டேவிட் பெயின் தேர்வானார். தொடர் நாயகனாக சாம் ஹார்பர் தேர்வானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.