

யு 19 கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 404/6 ரன்கள் எடுத்துள்ளது.
குரூப் சி பிரிவில் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டாவ்கின்ஸ் 5 ரன்களில் ஆட்டமிழக்க நம.3 வீரராக பென் மாயேஸ். களமிறங்கினார்.
இவரும் தொடக்க ஜோசப் மூரிஸும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். 188 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள்.
அதிகபட்சமாக பென் மாயேஸ் 191 ரன்களும் ஜோசப் மூரிஸ் 81 ரன்களும் எடுத்தார்கள்.
இறுதியில் 50 ஓவர்களில் 404 ரன்கள் எடுத்தார்கள். குரூப் சி பிரிவில் ஏற்கெனவே இங்கிலாந்து அடுத்த சுற்றுக்குத் தகுதிப் பெற்றதால், ஸ்காட்லாந்து அணிக்கு இந்த வெற்றி முக்கியமானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.