

பிபிஎல் தொடரின் நாக் அவுட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
மழையின் காரணமாக போட்டி 10 ஓவர்களாக நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 கிரிக்கெட் போட்டிகளின் 15ஆவது சீசனாக பிபிஎல் நடந்துவருகின்றன.
இதில் பெர்த் ஸ்கார்செஸ் அணி இறுதிப் போட்டிக்கு நேற்று (ஜன.20) முன்னேறியது.
தற்போது, நாக் அவுட் சுற்றில் மெல்பர்ன் ஸ்டார்ஸ் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதுகின்றன.
முதல் ஓவரில் மேக்ஸ்வெல் பந்துவீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இந்தப் போட்டியில் வெல்லும் அணி சிட்னி சிக்ஸர்ஸுடன் மோதும் என்பது கவனிக்கத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.