

ஐரோப்பாவில் முதல்முறையாக ஐரோப்பியன் டி20 பிரீமியர் லீக் (இடிபிஎல்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஐசிசி அனுமதியுடன் இந்த லீக் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. நெதர்லாந்தின் கேன்சிபி, அயர்லாந்தின் சிஐ, ஸ்காட்லாந்தின் சிஎஸ் மற்றும் அபிஷேக் பச்சன் இணைந்து இந்தப் போட்டிகளை நடத்துகிறார்கள்.
கால்பந்துக்கு மட்டுமே பிரபலமாக இருக்கும் ஐரோப்பாவில் தற்போது கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
அயர்லாந்து, வடக்கு அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளின் கிரிக்கெட் அமைப்புகள் இந்தப் போட்டிகளை நடத்துகின்றன.
லெஜெண்டரி முன்னாள் ஹாக்கி வீரர் ஜேமி வியெர், முன்னாள் நியூசி வீரர் கைல் மில்ஸ், ஆஸி. பேட்டர் க்ளென் மேக்ஸ்வெல் இந்த அணிகளுக்கு உரிமையாளராக இருக்கிறார்கள்.
இந்தப் போட்டிகள் ஐபிஎல் போட்டிகளை பாதிக்காத வண்ணம் ஜூலை முதல் ஆகஸ்ட் வரை நடைபெற இருக்கின்றன.
மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் தற்போதைக்கு மூன்று அணிகளின் உரிமையாளர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிட்னியில் இந்தப் போட்டிகளின் அணிகள் விவரங்கள் அறிவிக்கப்பட்டன.
ஆம்ஸ்டர்டெம்: ஸ்டீவ் வாக், ஜேமி டையெர் & டிம் தாமஸ்.
எடின்பெர்க்: நாதன் மெக்கல்லம், கைல் மில்ஸ்.
பெல்பெஸ்ட்: க்ளென் மேக்ஸ்வெல், ரோஹன் லுந்த்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.