பந்துவீச்சில் அகந்தை இல்லை; என்ன சொல்கிறார் பும்ரா?

பந்துவீச்சில் தனக்கு அகந்தை (ஈகோ) இல்லை என மும்பை அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.
ஜஸ்பிரித் பும்ரா
ஜஸ்பிரித் பும்ராபடம் | ஐபிஎல்

பந்துவீச்சில் தனக்கு அகந்தை (ஈகோ) இல்லை என மும்பை அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது.இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

ஜஸ்பிரித் பும்ரா
2027 உலகக் கோப்பையில் விளையாட விரும்புகிறேன்: ரோஹித் சர்மா

இந்த நிலையில், வேகப் பந்துவீச்சாளர் என்ற அகந்தை இல்லை எனவும், ஆட்டத்தின் தேவைக்கு ஏற்ப மெதுவாக பந்துவீசவும் தயாராக உள்ளேன் எனவும் மும்பை அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

படம் | ஐபிஎல்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நீங்கள் எல்லா நேரங்களிலும் யார்க்கர் பந்துகளை வீச வேண்டியதில்லை. சில நேரங்களில் யார்க்கர் பந்துகளை வீச வேண்டியிருக்கும். சில நேரங்களில் ஷாட் பால்களை வீச வேண்டியிருக்கும். டி20 போட்டிகளில் வேகப் பந்துவீச்சாளர் என்ற அகந்தை இல்லை. உங்களால் மணிக்கு 145 கி.மீ வேகத்தில் பந்துகளை வீச முடியும். ஆனால், சில நேரங்களில் மெதுவாக பந்துவீசுவது முக்கியம்.

ஜஸ்பிரித் பும்ரா
ஹார்திக் பாண்டியாவை ரசிகர்கள் நேசிக்கும் நாள் வெகு தூரமில்லை: இஷான் கிஷன்

என்னுடைய பந்துவீச்சு சிறப்பானதாக அமையவில்லை என்றால், அடுத்த நாள் எனது முந்தைய நாள் பந்துவீச்சு விடியோக்களை எடுத்துப் பார்த்து எங்கு தவறு செய்தோம் என்பதை கவனித்து பந்துவீச்சை மேம்படுத்திக் கொள்வேன். போட்டிக்கு நம்மை தயார் செய்து கொள்வது எப்போதும் முக்கியமானது. நான் 5 விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என ஒருபோதும் நினைத்ததில்லை. அணிக்காக எனது பங்களிப்பை வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

நேற்றையப் போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள யுஸ்வேந்திர சஹாலுடன் இணைந்து அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தில் உள்ளார். அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com