சன் ரைசர்ஸ் - ஆர்சிபி போட்டிக்குப் பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் (புள்ளிவிவரம்)
படம் | ஐபிஎல்

சன் ரைசர்ஸ் - ஆர்சிபி போட்டிக்குப் பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் (புள்ளிவிவரம்)

பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான நேற்றைய போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
Published on

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.

ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 288 ரன்கள் என்ற இமாலய இலக்கை ஆர்சிபிக்கு நிர்ணயித்தது.

சன் ரைசர்ஸ் - ஆர்சிபி போட்டிக்குப் பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் (புள்ளிவிவரம்)
சிஎஸ்கேவுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து எம்.எஸ்.தோனி சாதனை!

ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட் 39 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

இந்தப் போட்டிக்குப் பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் பின்வருமாறு:

ஐபிஎல் தொடரில் ஓர் அணியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள்

287/3 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் vs ஆர்சிபி, 2024

277/3 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ், 2024

272/7 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs தில்லி கேப்பிடல்ஸ், 2024

263/5 - ஆர்சிபி vs புணே வாரியர்ஸ், 2013

257/7 - லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், 2023

டி20 போட்டி ஒன்றில் ஓர் அணியால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள்

314/3 - நேபாளம் vs மங்கோலியா, 2023

287/3 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் vs ஆர்சிபி, 2024

278/3 - ஆப்கானிஸ்தான் vs அயர்லாந்து, 2019

278/4 - செக் குடியரசு vs துருக்கி, 2019

277/3 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ், 2024

ஐபிஎல் தொடரில் ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள்

22 சிக்ஸர்கள் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் vs ஆர்சிபி, 2024

21 சிக்ஸர்கள் - ஆர்சிபி vs புணே வாரியர்ஸ், 2013

20 சிக்ஸர்கள் - ஆர்சிபி vs குஜராத் லயன்ஸ், 2016

20 சிக்ஸர்கள் - தில்லி கேப்பிடல்ஸ் vs குஜராத் லயன்ஸ், 2017

20 சிக்ஸர்கள் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ், 2024

டி20 போட்டி ஒன்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள்

38 சிக்ஸர்கள் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ், 2024

38 சிக்ஸர்கள் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் vs ஆர்சிபி, 2024

37 சிக்ஸர்கள் - பால்க் லெஜண்ட்ஸ் vs காபூல், 2018

37 சிக்ஸர்கள் - ஜமைக்கா தல்லாவாஸ் vs செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ் பாட்ரியாட்ஸ், 2019

சன் ரைசர்ஸ் - ஆர்சிபி போட்டிக்குப் பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் (புள்ளிவிவரம்)
சன் ரைசர்ஸின் பேட்டிங் ரகசியத்தைப் பகிர்ந்த டிராவிஸ் ஹெட்!

டி20 போட்டி ஒன்றில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்கள் (இரண்டு அணிகளும் சேர்த்து)

549 ரன்கள் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் vs ஆர்சிபி, 2024

523 ரன்கள் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ், 2024

517 ரன்கள் - மே.இ.தீவுகள் vs தென்னாப்பிரிக்கா, 2023

515 ரன்கள் - முல்தான் சுல்தான்ஸ் vs குவெட்டா கிளாடியேட்டர்ஸ், 2023

டி20 போட்டி ஒன்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச பவுண்டரிகள்

81 பவுண்டரிகள் (43 ஃபோர்கள் மற்றும் 38 சிக்ஸர்கள்) - ஆர்சிபி vs ஹைதராபாத், 2024

81 பவுண்டரிகள் (46 ஃபோர்கள் மற்றும் 35 சிக்ஸர்கள்) - மே.இ.தீவுகள் vs தென்னாப்பிரிக்கா, 2023

78 பவுண்டரிகள் (45 ஃபோர்கள், 33 சிக்ஸர்கள்) - குவெட்டா கிளாடியேட்டர்ஸ் vs முல்தான் சுல்தான்ஸ், 2023

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com