‘குழந்தை மனசுக்காரன்’ ரோஹித் சர்மா: வைரலாகும் விடியோ!

மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
‘குழந்தை மனசுக்காரன்’ ரோஹித் சர்மா: வைரலாகும் விடியோ!
படங்கள்: ரோஹித் சர்மா /இன்ஸ்டா

மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.

மும்பை அணிக்காக 5 கோப்பையை பெற்று தந்த ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த இரண்டாடுகளாக மும்பை அணி மோசமாக விளையாடி வருகிறது. தற்போது ஹார்திக் பாண்டியா கேப்டனாக இருக்கிறார்.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி அசத்தியது. இதில் சதமடித்து அசத்தினார் ரோஹித்.

‘குழந்தை மனசுக்காரன்’ ரோஹித் சர்மா: வைரலாகும் விடியோ!
இது 2-ஆவது முறை: ரன் அடிக்காமலே ஜெயித்த ஆவேஷ் கான்!

36 வயதான ரோஹித் சர்மா டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார். தற்போது நாளைய போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ரோஹித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பேட்டிற்கு ஆசையாக ஸ்டிக்கர் ஒட்டும் விடியோவை வெளியிட்டுளார். அந்த விடியோவில், "சிகிச்சை” எனத் தலைப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் ரோஹித்தை ‘குழந்தை மனசுக்காரன்’ என கமெண்டுகளில் புகழ்ந்து வருகிறார்கள்.

புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி 7வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணியுடன் நாளை சண்டிகரில் மோதுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com