பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

பேட்டிங் மற்றும் பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவைப்படுவதாக தில்லி கேப்பிடல்ஸ் அணியின் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
டேவிட் வார்னர்
டேவிட் வார்னர்படம் | ஐபிஎல்

பேட்டிங் மற்றும் பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவைப்படுவதாக தில்லி கேப்பிடல்ஸ் அணியின் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள தில்லி கேப்பிடல்ஸ் 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இனிவரும் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் தில்லி கேப்பிடல்ஸ் அணி உள்ளது.

டேவிட் வார்னர்
ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகள் வீழ்த்தி சஹால் சாதனை!

இந்த நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இனிவரும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் தில்லி கேப்பிடல்ஸ் இருப்பதாகவும், பேட்டிங் மற்றும் பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவைப்படுவதாகவும் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நாங்கள் புள்ளிப்பட்டியலில் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என நினைத்தோமோ அந்த இடத்தில் இல்லை. இன்னும் சில போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டுமென்றால், இனி வரும் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றாக வேண்டும். எங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட வேண்டும்.

டேவிட் வார்னர்
குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி சந்தித்த தோல்விகள்!

பேட்டிங் மற்றும் பௌலிங்கில் எங்களிடம் சிறிது முன்னேற்றம் தேவைப்படுகிறது. பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு எதிரணியின் ஸ்கோரை கட்டுப்படுத்த முயற்சித்தால் நன்றாக இருக்கும். முதல் பேட்டிங் செய்யும் சூழல் ஏற்பட்டால், பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டு பெரிய அளவிலான ஸ்கோரை குவிக்க வேண்டும் என்றார்.

தில்லியில் நாளை (ஏப்ரல் 24) நடைபெறும் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com