ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் எங்கு தோல்வி அடைந்தோம் என்பது குறித்து பேசியுள்ளார்.
ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

ஐபிஎல் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் தில்லி கேப்பிட்டல்ஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை புதன்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.

முதலில் தில்லி 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் எடுக்க, குஜராத் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்களே சோ்த்தது.

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!
டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

இந்தத் தோல்வி குறித்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் கூறியதாவது:

தோல்வியடைந்தாலும் நாங்கள் அருமையான கிரிக்கெட்டினை விளையாடினோம். கடைசிவரை போராடினோம். போட்டியின் எந்த இடத்திலும் நாங்கள் தோல்வியடைவோம் என்று நினைக்கவே இல்லை. கடைசியில் தோல்வியடைந்தது சற்று வருத்தமளிக்கிறது. 224 ரன்களை சேஸிங் செய்யும்போது எந்த திட்டம் குறித்தும் பேசிப் பயனில்லை; களத்துக்கு சென்று ரன்கள் அடிக்க வேண்டும். அதிக ரன்கள் வருவதற்கு இம்பாக்ட் பிளேயர் என்ற விதிமுறை சற்று முக்கியமான பங்கினை வகிக்கிறது. ஒரு விக்கெட்டினை இழந்தாலும் பேட்டர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது.

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!
ரிஷப் பந்த் புதிய சாதனை!

200-210க்குள் எதிரணியை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் கடைசி 2-3 ஒவர்களில் அதிகமான ரன்களை வழங்கிவிட்டோம். ஆனால் இது சிறிய ஆடுகளம். செயல்படுத்துவது முக்கியமானது. பந்து வீச்சு அல்லது ஃபினிஷிங்கில் நாம் சரியாக நினைத்தது செயல்படுத்த வேண்டும். யார்க்கர் அல்லது வித்தியாசமான பந்துகளை பந்துவீச்சாளர்கள் வீசியிருக்க வேண்டும் என்றார்.

ஏற்கனவே, ரோஹித் சர்மா, சிராஜ் உள்ளிட்ட சிலர் இம்பாக்ட் பிளேயர் விதிமுறைகளை கண்டித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரோஹித் வரிசையில் ஷுப்மன் கில்லும் இணைந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com