ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் ஷிகர் தவான் விளையாடமாட்டார் என அந்த அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
ஷிகர் தவான்
ஷிகர் தவான் படம் | ஐபிஎல்

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் விளையாடமாட்டார் என அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் சுனில் ஜோஷி தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் கடைசியாக கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் விளையாடினார். அதன்பின் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் விளையாடவில்லை. அவர் அணியில் இல்லாதபோது சாம் கரண் அணியை கேப்டனாக வழிநடத்தினார்.

ஷிகர் தவான்
ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

இந்த நிலையில், கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் விளையாடமாட்டார் எனவும், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியின்போது அணியில் இணைவார் எனவும் பஞ்சாப் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் சுனில் ஜோஷி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷிகர் தவான் சிறப்பான ஃபார்மில் இருந்தார். அவர் கடந்த மூன்று போட்டிகளில் இல்லாதது அணியின் பேட்டிங்குக்கு மிகப் பெரிய இழப்பு. அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் களமிறங்குவார் என்றார்.

ஷிகர் தவான்
ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

வருகிற மே 1 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com